மாத்தறை நீதிமன்றில் இன்று(19) சரணடைந்த முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின்(Deshabandu Tennakoon) வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது ஆயிரம் மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றில் இன்று (19) உரையாற்றிய பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால(Ananda Wijepala )இதனைத் தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
மதுபான போத்தல்களின் விபரம்
முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வீட்டில் சுமார் 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும் 214 வைன் போத்தல்களும் கண்டெடுக்கப்பட்டன.
இரண்டு கைத்தொலைபேசிகளும் மீட்பு
அத்துடன் சோதனை நடவடிக்கையில் இரண்டு கைத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.
“இந்த தொலைபேசிகளிலிருந்து முக்கியமான தகவல்களைக் கண்டறிய முடியும்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இந்த விடயம் குறித்து நீதிமன்றுக்கு அறிக்கை அளிப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.
தேசபந்து தென்னகோனுக்கு சொந்தமான ஹோகந்தரவில் உள்ள வீட்டில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையின்போதே மேற்படி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.