முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கருத்துக் கணிப்பில் முன்னிலை பெற்றுள்ள டிரம்ப்

அமெரிக்க தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், கருத்துக் கணிப்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் (Donald Trump)  முன்னிலை பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தேர்தல் குறித்து வால் ஸ்ட்ரீட் பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் 47 சதவீத வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாகவும், கமலா ஹாரிஸ் (Kamala Harris)  45 சதவீத வாக்குகள் பெறவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

 ஜனாதிபதி தேர்தல்

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய அமெரிக்க துணை ஜனாதிபதியும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் இருவருக்கும் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கருத்துக் கணிப்பில் முன்னிலை பெற்றுள்ள டிரம்ப் | Trump Leads In Us Presidential Election 2024 Polls

இதேவேளை, சிஎன்பிசி அமெரிக்க பொருளாதார நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் டொனால்ட் டிரம்ப் 48 சதவீத வாக்குகளும், கமலா ஹாரிஸ் 46 சதவீத வாக்குகளும் பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பு கடந்த ஒகஸ்ட் மாதத்தில் இருந்து மாறாமல் இருக்கிறது.

டிரம்ப் முன்னிலை

ஜோர்ஜியா, பென்சில்வேனியா, ஹரிசோனா, விஸ்கான்சின், நெவாடா, வட கரோலினா மற்றும் மிச்சிகன் ஆகிய ஏழு மாநிலங்களில் டிரம்ப் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கருத்துக் கணிப்பில் முன்னிலை பெற்றுள்ள டிரம்ப் | Trump Leads In Us Presidential Election 2024 Polls

எனினும், ரியல்க்ளியர்பாலிடிக்ஸ் தெரிவித்துள்ள அறிக்கையில் அமெரிக்கா முழுவதும் டிரம்பைவிட கமலா ஹாரிஸ் 0.3 சதவீத வாக்குகள் அதிகமாக பெறுவார் என்று தெரிவித்துள்ளது.

ஆனால்,ஜோர்ஜியா, பென்சில்வேனியா, அரிசோனா, விஸ்கான்சின், நெவாடா, வட கரோலினா மற்றும் மிச்சிகன் ஆகிய ஏழு மாநிலங்களில் 0.9 சதவீத வாக்குகள் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார்.

கருத்துக் கணிப்பு

அமெரிக்க நிதி பரிமாற்ற அமைப்பான கால்ஷியும் டிரம்ப் முன்னிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தலில் டிரம்ப் 61 சதவீதமும், கமலா ஹாரிஸ் 39 சதவீத வாக்குகளும் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கருத்துக் கணிப்பில் முன்னிலை பெற்றுள்ள டிரம்ப் | Trump Leads In Us Presidential Election 2024 Polls

இதற்கிடையில், ஜனாதிபதி தேர்தலுக்கு 12 நாள்களுக்கு முன்னதாக 3 கோடிக்கும் அதிகமான அமெரிக்க மக்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர்.

இவர்களில் 1.36 கோடி பேர் தபால் முறையில் வாக்களித்துள்ளனர். அவர்களில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் தபால் முறையில் வாக்களித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.