கனடாவில் (Canada) குடியேறும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்க தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானமானது, பொருளாதாரத்தின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர் விசா
இதேவேளை, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களைச் சுரண்டும் நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறதாகவும் ட்ரூடோ, சுட்டிக்காட்டியுள்ளார்.
We’re cracking down on corporations and colleges that exploit foreign workers and international students. pic.twitter.com/BEQ9iGH5MM
— Justin Trudeau (@JustinTrudeau) October 25, 2024
அத்தோடு, கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு சர்வதேச மாணவர்களுக்கான மாணவர் விசாக்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில் ட்ரூடோ அறிவிப்பொன்றை வெளியிட்டார்.
புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை
அதன்போது, இந்த ஆண்டு 35 சதவீதத்திற்கும் குறைவாகவே வெளிநாட்டு மாணவர்களுக்கு நாங்கள் விசா வழங்கியதாகவும், இந்த எண்ணிக்கை 10 சதவீதம் குறைக்கப்படும் என்று அவர் அறிவித்திருந்தார்.
Immigration is central to the story of Canada. Our decision to temporarily reduce the number of immigrants is a pragmatic one that addresses the needs of our economy right now. pic.twitter.com/MmNvfqcHBy
— Justin Trudeau (@JustinTrudeau) October 24, 2024
அதனைதொடர்ந்து, நேற்றையதினம் (25) இரண்டு ஆண்டுகளில் கனடாவுக்கு வரும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.