முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு – வன்னியில் வாக்குச்சீட்டு அட்டை விநியோகம் : வெளியான அறிவிப்பு

கொழும்பு (Colombo) மற்றும் வன்னி (vanni) மாவட்டங்களில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த நடவடிக்கையானது இன்று (28) முன்னெடுக்கப்படவுள்ளதாக  தபால் திணைக்களம் (Department of Posts) அறிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்களிப்பு அட்டைகளுடன் தேவையான அறிவித்தல்களை தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) வழங்காமையால் இவ்விரு மாவட்டங்களிலும் விநியோகம் தாமதமாகியுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க (Rajitha Ranasinghe) தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு 

நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு அட்டைகள் விநியோகம் நேற்று (27) தொடங்கிய நிலையில்  இப்பணிகளுக்காக சுமார் 8,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ராஜித ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு - வன்னியில் வாக்குச்சீட்டு அட்டை விநியோகம் : வெளியான அறிவிப்பு | Districts Ballot Card Distribution Begin Today

நவம்பர் ஏழாம் திகதிக்குள் உத்தியோகபூர்வ வாக்களிப்பு அட்டைகளைப் பெறாத நபர்கள் அருகிலுள்ள தபால் நிலையத்திலிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R. M. A. L.Ratnayake) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை மறுதினம் (30) ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு - வன்னியில் வாக்குச்சீட்டு அட்டை விநியோகம் : வெளியான அறிவிப்பு | Districts Ballot Card Distribution Begin Today

இந்தநிலையில், நவம்பர் முதலாம் திகதி மற்றும் நான்காம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த திகதிகளில் வாக்களிக்க முடியாத அரசு ஊழியர்களுக்கு நவம்பர் ஏழு மற்றும் எட்டு ஆகிய திகதிகளில் வாக்களிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்கான வசதிகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்