15 -20 வருடங்களுக்கு தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்காது தங்களது பதவி மோகங்களுக்கும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் முன்னின்று செயற்படுகின்றார்கள் என சட்டத்தரணி கே. வி தவராசா (K.V. Thavarasha ) குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் (27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாம் இம்முறை தேர்தலிலே வாக்களிக்கும் போது யாருக்கு ஏன் இந்த வாக்கினை அளிக்கிறோம் என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
எங்களுக்கு என்று ஒரு அடையாளம் இருக்கின்றது. எமக்கென்று ஒரு மொழி இருக்கின்றது. இதை நாம் மறந்து விட முடியாது.
ஆகவே இந்த தேர்தலிலே ஒரு மாற்றம் தேவைப்படுகின்றது. அந்த மாற்றம் நிகழாது போனால் நாம் மிகப்பெரும் வரலாற்றுத் தவறை புரிவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்…