உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் (Canada) கடந்த வருடம் முதலிடத்திலிருந்த கனடா மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
புதிய உலகளாவிய பாதுகாப்பு அறிக்கையின் படி (Berkshire Hathaway Travel Protection) இந்த இடம் கனடாவுக்கு கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுக்குச் சென்ற பயணிகளை ஆய்வு செய்து, வன்முறைக் குற்ற அபாயம், பயங்கரவாத பாதுகாப்பு, போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரநிலைகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களை மதிப்பிட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதலிடம்
இதன்படி, கடந்த ஆண்டு 9வது இடத்திலிருந்த ஐஸ்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு 10 வது இடத்தில் இருந்த அவுஸ்திரேலியா (Australia) இந்த ஆண்டு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
நான்காவது இடத்தை அயர்லாந்தும் 5வது இடத்தை சுவிட்சர்லாந்தும் பிடித்துள்ளன.
கனடாவில் உள்ள காட்டு உயிரினங்கள்
ஆறாவது இடத்தை நியூசிலாந்தும் ஏழாவது இடத்தை ஜெர்மனி பிடித்துள்ளன.
எட்டாவது இடத்தை நோர்வேவும், ஒன்பதாவது இடத்தை ஜப்பானும், 10 வது இடத்தை டென்மார்க்கும் பிடித்துள்ளன.
ஆய்வறிக்கையில், கனடாவில் உள்ள காட்டு உயிரினங்கள் குறித்து பயணிகள் விழிப்புடன் இருக்குமாறு கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.