போரை முடிவுக்கு கொண்டு வந்த மகிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்குவது அவசியம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அநுர அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
மாத்தளையில் (Matale) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்போது, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி சலுகைகள்
தொடர்ந்தும் அவர் தெரிவித்துள்ளதாவது, முன்னாள் ஜனாதிபதிகளின் வீட்டு சலுகையை ரத்து செய்வதாக கூறுகிறார்கள். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நான் வீட்டில் இருக்க மாட்டேன்.
ஆனால் ஏன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை வெளியேற்றுகிறீர்கள், அவரை அந்த வீட்டில் இருக்க விடுங்கள். விசேடமாக ஒன்றும் இல்லை, ஒரு மனிதாபினத்திற்காக.
மகிந்தவின் பாதுகாப்பு
மகிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அவசியம், போரை முடிவுக்கு கொண்டு வந்தவரை பற்றி யோசித்து பாருங்கள்.
பாதுகாப்பு பிரச்சினை இருப்பவர் யாராக இருந்தாலும், அவருக்கு நாங்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மற்றவர்களுக்கு பாதுகாப்பை வழங்குங்கள், எனக்கு வழங்கப்பட்டுள்ளவை அனைத்தையும் நீக்குங்கள். ” என்றார்.