முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் பொய்யுரைக்கும் ஹரிணி: குற்றஞ்சாட்டும் சாகல ரத்நாயக்க

அரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya ) தொடர்ந்தும் பொய்களையே கூறிக் கொண்டிருக்கின்றார் என முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka)  தெரிவித்துள்ளார்.

பிரதமராக பொறுப்பான பதவியிலிருந்து கொண்டு பொய் கூறிக் கொண்டிருப்பவரை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்ய வேண்டுமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் 31, இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சம்பள விவகாரம்

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

”தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு தொடர்பில் பின்பற்றும் கொள்கை என்ன என்பது தொடர்பில் தெளிவற்ற நிலைமையே காணப்படுகிறது.

அரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் பொய்யுரைக்கும் ஹரிணி: குற்றஞ்சாட்டும் சாகல ரத்நாயக்க | Govt Salary Issue Increase Pm False Claims Exposed

ஒரு சந்தர்ப்பத்தில் அரசாங்கம் சர்வதேசத்துக்கு உரையாற்றிய போது அந்த ஒப்பந்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதாகக் கூறியது.

நாணய நிதியக் குழு நாட்டுக்கு வருகை தந்த போதும், அமெரிக்காவில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான வழக்கொன்றின் போதும் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

ஆனால் தெளிவாக இதுதான் எம்முடைய கொள்கை என்று அரசாங்கம் குறிப்பிடவில்லை. மறுபுறம் அரச உத்தியோகத்தர்களின் சம்பள விவகாரத்திலும் அரசாங்கம் இவ்வாறான குழப்பத்திலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது.

 பொருளாதார வளர்ச்சி வேகம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கேள்விகளுக்கு பதிலளிக்காத ஜனாதிபதி, தற்போது பிரதமரை அதற்காக முன்னிலைப்படுத்தியுள்ளார்.

2024 இல் நாம் எதிர்பார்த்ததை விட பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகமாகவே காணப்பட்டது.

அரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் பொய்யுரைக்கும் ஹரிணி: குற்றஞ்சாட்டும் சாகல ரத்நாயக்க | Govt Salary Issue Increase Pm False Claims Exposed

அதற்கமைய அரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கை செலவு கொடுப்பனவாக 10 000 ரூபா வழங்கப்பட்டது.

எனினும் அந்த கொடுப்பனவு வழங்கப்பட்ட பின்னரும் ஆசிரியர் உள்ளிட்ட தொழிற்சங்கங்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் யார் இருந்தனர் என்பதையும் நாம் அறிவோம்.

எவ்வாறிருப்பினும் இதற்காக நியமிக்கப்பட்ட உதய ஆர் செனவிரத்ன குழுவின் அறிக்கைக்கமைய அடுத்த வருடம் முதல் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை 24 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

2025 மற்றும் 2026 ஆகிய இரு வருடங்களில் இந்த அதிகரிப்பை வழங்குவதற்கு அந்த குழுவால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

வரவு – செலவு திட்டத்தின் ஊடான இதனை நடைமுறைப்படுத்துவதற்கும் எமது அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் 

ஆனால் பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொய் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் பொய்யுரைக்கும் ஹரிணி: குற்றஞ்சாட்டும் சாகல ரத்நாயக்க | Govt Salary Issue Increase Pm False Claims Exposed

உண்மையில் தேசிய மக்கள் சக்தி பொய் கூறியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் 6 மாதங்களுக்கொருமுறை சம்பள அதிகரிப்பை வழங்குவதாகக் கூறிய ஜே.வி.பி. தற்போது அதனை முற்றாக மறுக்கிறது.

அவ்வாறெனில் யார் தற்போது பொய்யுரைத்துள்ளது?

அரசியலில் எந்தளவு நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் பொய் கூறி மக்களை ஏமாற்ற மாட்டார்.” என்றார்.

எனினும் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 17 தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) போன்ற ஒருவரின் ஆலோசனையை நான் ஒருபோதும் பெறமாட்டேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.