இலங்கைக்கான ஒஸ்திரிய (Austria) தூதுவர் கெத்ரீனா வெய்ஸர் (Katerina Weiser) பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பானது, பிரதமர் அலுவலகத்தில் இன்று (01) நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர, பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நீண்டகால நட்புறவு
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலக ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.