முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறிதரன் விரைவில் முகவரி அற்றுப் போய் விடுவார் – எச்சரிக்கும் கே வி தவராசா

தமிழரசு கட்சியில் இருந்த சிறிதரனும் எம்மோடு சேர்ந்து விலகி இருக்க வேண்டும், ஆனால் அவதை அவர் செய்யவில்லை விரைவில் அவர் முகவரி அற்றுப் போய்விடுவார் என ஜனாதிபதி
சட்டத்தரணியும் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் மாம்பழ சின்ன முதன்மை வேட்பாளரான
கே வி தவராசா (K.V. Thavarasha) தெரிவித்துள்ளார்.

யாழ். (Jaffna) கந்தர் மடப்பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர்
விடுதியில் நேற்றைய தினம் (3.11.2024) இடம்பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற தேர்தல்
விஞ்ஞாபனம் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நான் வடக்கில் பிறந்து தெற்கில் தொழில்
நிமிர்த்தம் வாழ்ந்து வரும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசை
இருந்திருந்தால் 14 வருடங்களாக தமிழரசு கட்சியில் எனது காலத்தை கழித்திருக்க
மாட்டேன்.

தெற்கின் பிரதான அரசியல் கட்சி

நாட்டை ஆட்சி புரிந்த ஜனாதிபதிகளாக இருந்தாலும் பிரதமர்களாக இருந்தாலும்
தெற்கின் பிரதான அரசியல் கட்சிகளின் தெற்கின் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருந்தாலும் சரி அனைவரையும்
எனக்கு தனிப்பட்ட முறையில் நன்கு தெரியும்.

சிறிதரன் விரைவில் முகவரி அற்றுப் போய் விடுவார் - எச்சரிக்கும் கே வி தவராசா | Kv Thavarasa Blame Sridharan

எனக்கு அவ்வாறு ஆசை இருந்திருக்கவில்லை, தமிழ் தேசியத்தை கட்டி காப்பாற்ற
வேண்டும் என்ற எண்ணம் தந்தை செல்வாவின் மறை நிகழ்வில் கொடிகள் கட்டிய போது
எனக்கு ஏற்பட்டது.

அந்த எண்ணத்தில் தமிழரசு கட்சியில் இணைந்தேன் 14 வருடங்கள் பயணித்தேன், பல்வேறு
தவறுகளை தலைவருக்கு சுட்டிக்காட்டினேன் ஆனால் எவையும் நிவர்த்தி
செய்யப்படவில்லை.

தமிழ் தேசியத்தை அழிக்கும் செயற்பாடு கட்சிக்குள் இடம்பெற்று வருகின்றமையை
தொடர்ந்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற காரணத்தினால்
கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

தமிழ் மக்களின் இனப்படுகொலை

தமிழரசு கட்சியில் இருந்த சிறிதரனும் எம்மோடு சேர்ந்து விலகி இருக்க வேண்டும் ஆனால் அவதை அவர் செய்யவில்லை விரைவில் அவர் முகவரி அற்றுப் போய்விடுவார்.

சிறிதரன் விரைவில் முகவரி அற்றுப் போய் விடுவார் - எச்சரிக்கும் கே வி தவராசா | Kv Thavarasa Blame Sridharan

சசிகலா ரவிராஜ் எம்மோடு சேர்ந்து பயணித்திருக்க வேண்டும், ஆனால் காலம் போதாது
அவரை இணைத்து பயணிக்க முடியவில்லை

சுமந்திரன் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான நீதிக்கு கால அவகாசம் முடிந்து
விட்டது தமிழர்கள் சமஸ்டித் தீர்வை கைவிட்டு விட்டார்கள் என கொழும்பில்
கூறினார்.

தேர்தல் வந்ததும் வடக்கில் தமிழ் மக்கள் சமஷ்டித் தீர்வை எதிர்பார்க்கிறார்கள்
அவற்றை அடைவதற்கு எமக்கு வாக்களியுங்கள் என கேட்கிறார்.

சுமந்திரன் தொடர்பில் நாங்கள் கூற வேண்டிய தேவை இல்லை மக்கள் நன்கு தெரிந்து
வைத்திருக்கிறார்கள் அவர்கள் தமது வாக்குகள் மூலம் பதிலை வழங்குவார்கள் என
கே வி தவராசா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.