முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொதுத் தேர்தல் : மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ள தபால் மூல வாக்களிப்பு

இலங்கையின் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மூன்றாவது நாளாக இன்று (04) இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்கினை அளிக்க முடியாதவர்கள், முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் வாக்காளர்களுக்கும் இன்று தபால் வாக்குகளை அளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இன்றும் தபால்மூல வாக்கினை அளிக்க முடியாத வாக்காளர்களுக்கு நவம்பர் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் தமது பணியிடம் அமைந்துள்ள மாவட்டத்திலுள்ள மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்தார்.

தேர்தலுக்கான வாக்களிப்பு 

அத்துடன், பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் விருப்பு வாக்கு குறித்து தெளிவுபடுத்தும் அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

பொதுத் தேர்தல் : மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ள தபால் மூல வாக்களிப்பு | Sl General Election Today Postal Voting 3Rd Day

அதன்படி, ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு வாக்கு உள்ளது, அது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவிற்கு வழங்கப்படலாம்.

வாக்கு அளிக்கப்படும் அரசியல் கட்சி அல்லது சின்னத்தின் முன் அல்லது சுயேட்சைக் குழுவின் எண் மற்றும் சின்னத்திற்கு முன் உள்ள இடத்தில் புள்ளடி அடையாளம் இடப்பட வேண்டும்.

விருப்பு வாக்கு 

அதன்பிறகு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவால் பரிந்துரைக்கப்படும் மூன்று வேட்பாளர்களுக்கு மேற்படாதவாறு விருப்பு வாக்கினை அளிக்க, ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒதுக்கப்பட்ட வரிசை எண் கொண்ட பெட்டியில் புள்ளடி அடையாளத்தை இடவேண்டும்.

பொதுத் தேர்தல் : மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ள தபால் மூல வாக்களிப்பு | Sl General Election Today Postal Voting 3Rd Day

இதற்கிடையில், வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களுக்கு வாக்களித்திருந்தால் அல்லது வாக்குச் சீட்டில் ஏதேனும் குறியீடு வைக்கப்பட்டால், அந்த வாக்கு செல்லுபடியாகாது.

மேலும், வாக்குப்பதிவு மற்றும் விருப்பு வாக்கின் போது புள்ளடி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.