முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம் : சஜித் வெளியிட்ட தகவல்

இலங்கையிலிருந்து உகண்டாவுக்கு (Uganda) கொண்டு செல்லப்பட்ட ஊழல்வாதிகளின் பணத்தை தற்போதைய அரசாங்கம் மீட்டு வரும் என மக்கள் காத்திருக்கின்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த பணத்தைப் பதுக்கி வைத்தவர்கள் அதில் நல்ல வட்டிகளை உழைத்து சுகபோகமாக உள்ளனர் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அவிசாவளையில் (Avissawella) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டு வரிசைக்குத் தீர்வு

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சிக்கு வந்ததிலிருந்து சிறந்த நகைச்சுவைகளைக் கூறிவருகிறது. மக்களை ஏமாற்றி ஒருபோதும் நாட்டை ஆட்சி செய்ய முடியாது.

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம் : சஜித் வெளியிட்ட தகவல் | Rajapaksa S Money Stashed In Uganda Sajith

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, கடவுச்சீட்டு வரிசைக்குத் தீர்வு வழங்குவதற்குப் பதிலாக புதிய வரிசைகளை ஏற்படுத்திவருகிறது. பொருட்கள் விலை மற்றும் வரி குறைப்புகளை மேற்கொள்ளவில்லை.

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஒப்பந்தத்தை மாற்றியமைப்பதாகக் கூறிய அநுர அரசாங்கம் (Anura Kumara Dissanayake) இன்று அவர்களிடம் மண்டியிட்டுள்ளது. ஜனாதிபதி இன்று எரிபொருள் சூத்திரத்தின் பணயக்கைதியாக மாறியுள்ளார்.

எரிபொருள் விலைக் குறைப்பு 

சாதாரண டீசல், பெட்ரோல் விலைகளைக் குறைக்க சந்தர்ப்பம் இருந்த போதிலும், ஒக்டேன் 95 பெட்ரோலின் விலையையும், சுப்பர் டீசல் விலையையும் குறைத்து தனவந்தர்களுக்குச் சலுகை வழங்கியுள்ளார்.

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம் : சஜித் வெளியிட்ட தகவல் | Rajapaksa S Money Stashed In Uganda Sajith

பொருட்கள் விலையைக் குறைப்பதற்கு நாடாளுமன்றத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டிய தேவையில்லை அவற்றை செய்வதற்கு நிறைவேற்று அதிகாரம் போதும்.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து சர்வதேச நாணயத்துடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி மக்களுக்கு சிறந்த சலுகைகளைப் பெற்றுக் கொடுக்கும்“ என  சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.