உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் விரும்பினால், இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் தானும் போட்டியிடுவேன் என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச(chamal rajapaksa) தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன(sri lanka podujana peramuna) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு இன்று (09) தங்காலை கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர்கள் விரும்பினால், நானும் போட்டியிடுவேன்
“இவர்கள் விரும்பினால், நானும் போட்டியிடுவேன்” என்று சமல் ராஜபக்ச கூறியபோது பலர் வெடித்துச் சிரித்தனர்.
அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் சென்று வருவதாக சமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார். அதன்படி, கடந்த காலங்களில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அவர் கூறினார்.