இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் கட்சியிலிருந்து தன்னை விரட்ட பலர் முயற்சித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் நேற்றைய தினம் கருத்து தெரிவித்த அவர்,
பதவிகளுக்காக அரசியலில் எவ்வாறு கேவலமான முறையில் செயற்படலாம் என்பதினை கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அறிந்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிளிநொச்சியில் தனது கட்சிக்குள்ளே தனித்துவத்தினை சிதைக்க கட்சியினை சார்ந்தவர்கள் பல காலமாக செயற்படுவதாகவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரால் களமிறக்கப்பட்ட சுயேட்சை கட்சியொன்று தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் சொந்த கட்சியினராலேயே வழக்கு தொடரப்பட்ட நிலையில், கட்சியின் தலைவராக செயற்பட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள விவகாரம் நாடாளுமன்ற தேர்தலில் எமது கட்சியின் ஆசனங்களை குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் தெரிவித்த பல கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,