நாடு தழுவிய ரீதியிலே இன்று (14) காலை 7 மணியிலிருந்து 13, 421 வாக்களிப்பு நிலையங்களிலே வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் வாக்களிப்பது என்பது உரிமை.இந்த உரிமைக்கு ஊடாகவே நாம் எமது ஜனநாயத்தை பிரயோகிக்கின்றோம்.
ஒரு ஜனநாயக நாட்டினுடைய அடிப்படையே தேர்தலாக இருக்கின்றது.அந்தவகையில் நாம் எமது உரிமையினை பயன்படுத்தி, எமக்குரிய பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான கடப்பாடு எமக்கு உள்ளது.
இந்த வாக்களிப்பு உரிமையை ஒரு தடவை பயன்படுத்தி விட்டால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு குறித்த உரிமையை மீளப்பெற முடியாது. ஆகவே வாக்காளர்கள் தமக்கான பொருத்தமான பிரதிநிதிகளை சரியான முறையில் தெரிவு செய்ய வேண்டும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்…..