தேர்தல் ஆணைக்குழுவின் நாற்பது அதிகாரிகள் தேர்தல் பயிற்சிக்காக இந்தியாவுக்குப் சென்றுள்ளனர் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பயிற்சிக்காக இவ்வளவு பெரிய தேர்தல் அதிகாரிகள் குழு அனுப்பப்படுவது இதுவே முதல் முறை.
40 அதிகாரிகள் பயணம்
தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் இருந்து 40 அதிகாரிகள் இவ்வாறு சென்றுள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணைக்குழு மற்றும் இந்திய அரசின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் தேர்தல் பயிற்சிப் பட்டறை ஒரு வாரம் நடைபெறவுள்ளது.

