முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்திய இஸ்ரேல்

அறுகம்குடா (Arugam bay) பிரதேசத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கூறி இஸ்ரேல் (israil) தனது பிரஜைகளுக்குப் பிறப்பித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.

அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு சபையால் அந்த எச்சரிக்கை அளவை நான்கில் இருந்து இரண்டாக குறைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சந்தேகநபர்கள் கைது

அறுகம்குடா பிரதேசத்தில் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வௌியாகியிருந்தன.

இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்திய இஸ்ரேல் | Israel Removes Ravel Warning For Sri Lankan Beach

இதனால் மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்குடா பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இஸ்ரேல் தனது குடிமக்களுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி எச்சரிக்கை விடுத்திருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அண்மையில் அரசாங்கம் அறிவித்தது. சந்தேக நபர்களில் மாலைத்தீவு பிரஜை ஒருவரும் அடங்கியுள்ளார்.

அமெரிக்க தூதரகம்

இதேவேளை, அறுகம் குடா சுற்றுலா பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்திய இஸ்ரேல் | Israel Removes Ravel Warning For Sri Lankan Beach

இலங்கையில் அறுகம் குடா பகுதியில் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதன் போது இஸ்ரேலியர்கள் குறிவைக்கப்படலாம் என்றும் உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் ஒக்டோபர் 23 அன்று அமெரிக்க தூதரகம் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது.

எவ்வாறாயினும், தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பிக்கவுள்ளதாக அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்