முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாம் அநுர அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல! சி.வி.கே சிவஞானம் சுட்டிக்காட்டு

நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிரானவர்கள்
அல்லது எதிர்ப்பானவர்கள் அல்லர்  என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும் வடக்கு மாகாண
சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது அலுவலகத்தில் நேற்று (16) நடாத்திய ஊடக
சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

உரிமை சார்ந்த எமது பயணம் 

மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தமிழரசுக் கட்சி இருந்தபோது நாங்கள் ஆறு
ஆசனங்களைப் பெற்றிருந்தோம்.

ஆனால், இப்போது தமிழரசுக் கட்சி தனித்துப்
போட்டியிட்டு எட்டு ஆசனங்களை அதுவும் பல்வேறு தரப்பினரின் எதிர்புகளுக்கு
மத்தியில் பெற்றிருக்கின்றது.

நாம் அநுர அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல! சி.வி.கே சிவஞானம் சுட்டிக்காட்டு | We Are Not Against Npp Gov Cvk Sivagnanam

எங்கள் கட்சிக்கு வாக்களித்த அத்தனை மக்களுக்கும் அதேபோல் போட்டியிட்ட
வேட்பாளர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் வெற்றி பெற்ற
வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கின்றோம்.

எமது மக்களுடைய உரிமை
சார்ந்த எமது பயணம் தொடரும்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தி அலையாக அல்லது சுனாமியாக இந்த முறை வெற்றியைப்
பதிவு செய்திருக்கின்றது.

இந்தக் கட்சி மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட
பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிருக்கின்றது. இந்தக் கட்சியில்
யாழ்ப்பாணத்திலும், ஏனைய இடங்களிலும் சிலர் தெரிவு செய்யப்பட்டும் உள்ளனர்.

மக்கள் ஆணை

ஆகவே, நாங்கள் கட்சி சார்ந்து அல்லது கொள்கை சார்ந்து சொல்லக்கூடிய விடயம்
என்னவென்றால் அநுர தரப்பினர் முன்னைய காலத்தில் 13 ஆவது திருத்தத்துக்கும்
மாகாண சபை முறைமைக்கு எதிராகவும் போராடியவர்கள்.

ஆனால், இப்போது தமிழ் மக்கள்
அதனை விரும்புவதாலும், புதிய அரசமைப்பைக் கொண்டு வரவுள்ளதாலும் அந்த முறைமை
அப்படியே இருக்கட்டும் என்றவாறான மாற்றமொன்று அவர்களிடத்தே
ஏற்பட்டிருக்கின்றது.

நாம் அநுர அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல! சி.வி.கே சிவஞானம் சுட்டிக்காட்டு | We Are Not Against Npp Gov Cvk Sivagnanam

நாங்கள் கேட்பது எங்கள் இனத்துவ அடையாளத்தை எங்களது தாயகத்தில் பேணிக்
கொண்டு எங்களுடைய கருமங்களை நாங்களே நிர்வகிக்கக் கூடிய ஒரு கட்டமைப்பைத்தான்
நாங்கள் கோரி நிற்கின்றோம்.

இந்த விடயத்தை உங்களுக்குச் சமர்ப்பித்து ஏற்கனவே மாகாண சபை விடயத்தை நீங்கள்
மீளாய்வு செய்தது போல எங்களுடைய இந்தக் கோரிக்கையையும் மீளாய்வு செய்து
தீர்வுகளை வழங்க வேண்டும்.

இப்போது உங்களுக்கு இருக்கின்ற ஆட்சிப் பலம், ஆதரவு பலம், மக்கள் பலம் என
எல்லாப் பலத்தையும் பயன்படுத்திக் கொண்டு மக்கள் ஆணையைப் பெற்ற நீங்கள்
உங்கள் கொள்கையை மீளாய்வு செய்து தமிழ் மக்களையும் அணைத்துச் செல்லக்
கூடியதாகப் பயணம் அமைய வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.