முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

போர் நிறுத்தம் குறித்து அறிவித்த ஹமாஸ்! ட்ரம்பிடம் முன்வைத்த நிபந்தனை

ஓராண்டிற்கும் மேலாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், போர் நிறுத்தத்திற்குத் தான் தயாராக இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்த போர் நிறுத்தத்திற்கு அமெரிக்காவும் ட்ரம்பும் அழுத்தம் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

போர் நிறுத்தம்

கடந்த வாரம் போர் நிறுத்தத்தில் இரு தரப்பும் உறுதியாக இருக்க வேண்டும் என கூறி கட்டார் மத்தியஸ்தனம் செய்யும் பொறுப்பில் இருந்து விலகி இருக்கும் சூழலில் ஹமாஸ் தரப்பு தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

போர் நிறுத்தம் குறித்து அறிவித்த ஹமாஸ்! ட்ரம்பிடம் முன்வைத்த நிபந்தனை | Hamas Ready For Ceasefire Urges

இது தொடர்பாக தோஹாவில் உள்ள ஹமாஸ் அரசியல் பிரிவு உறுப்பினர் பாஸ்சம் நைம் கூறுகையில், “போர்நிறுத்தம் குறித்த முன்மொழிவு வைக்கப்பட்டால் அதை ஏற்க ஹமாஸ் தயாராக உள்ளது.

இஸ்ரேலும் அந்த போர் நிறுத்த முன்மொழிவை மதிக்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நிபந்தனை.

ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என நாங்கள் டிரம்பை கேட்டுக் கொள்கிறோம்” என அவர் கூறியுள்ளார்.

போர் நிறுத்தம் குறித்து அறிவித்த ஹமாஸ்! ட்ரம்பிடம் முன்வைத்த நிபந்தனை | Hamas Ready For Ceasefire Urges

மத்தியஸ்தம் செய்த கட்டார்

காசா போரை முடிவுக்குக் கொண்டு வர பல உலக நாடுகள் முயன்றன. குறிப்பாக கட்டார் இரு தரப்பிற்கும் இடையே மத்தியஸ்தனம் செய்ய முயன்றது.

இருப்பினும், கடந்த சனிக்கிழமை மத்தியஸ்தராக தனது பங்கை நிறுத்திக்கொள்வதாக கத்தார் அறிவித்தது.

போர் நிறுத்தம் குறித்து அறிவித்த ஹமாஸ்! ட்ரம்பிடம் முன்வைத்த நிபந்தனை | Hamas Ready For Ceasefire Urges

அதேநேரம், இரு தரப்பும் போர் நிறுத்தத்தில் நிஜமாகவே ஆர்வம் காட்டினால் மீண்டும் இந்த பணியைத் தொடர நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று கட்டார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்