அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின் போது, பிள்ளையான் (Pillayan) மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
பிள்ளையான் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கபட்டுள்ளது.
இந்நிலையில், வடக்கு கிழக்கு மக்கள் ஆணை வழங்கி விட்ட பின்னர் தான் செயற்படுவதாக காட்டிக்கொள்ள அநுர இலகுவாக அடிக்ககூடிய அலக்கு பிள்ளையானின் கைது தான் என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “பிள்ளையான் முதலில் தமிழ் மக்களின் எதிரியாகதான் இருந்தார் பின்னர் அவர் சிங்கள மக்களின் எதிரியாக பார்க்கப்படுகின்றார்.
2/3 பெரும்பாண்மையுடன் வெற்றிப்பெற்றவர்களுக்கு பிள்ளையானின் கைதொன்றும் பெரிய விடயமாக அமையாது” என்றார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு..
https://www.youtube.com/embed/8_i4Mzh6ZVg