நடந்துமுடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளானது ஆச்சரியத்திற்கு உள்ளான ஒரு விடயமாக அனைத்து தரப்புக்களினாலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
இந்தநிலையில், இதில் முக்கிய விடயமாக தமிழர் தரப்பில் வெளிவந்த வாக்கு முடிவுகளானது காணப்படுகின்றது.
காரணம் களத்தினுள் இறங்கி வெறும் மூன்று மாதங்கள் மாத்திரமே அரசியல் செய்தவரும், தேர்தல் காலத்தில் அதிக சர்சைகளுக்கு உள்ளாகியிருந்தவருமான வைத்தியர் அர்ச்சுனாவை வெல்லவைத்து அழகு பார்த்திருக்கின்றனர் யாழ்ப்பாணத் தமிழ் மக்கள்.
அத்தோடு, தமிழர் பிரதேசங்களிலுள்ள மூத்த தமிழ் கட்சிகள் இந்த தேர்தலில் மக்களால் புறந்தள்ளப்பட்டுள்ளதுடன் அவர்கள் ஜே.வி.பியை ஆதரித்துள்ளனர்.
தமிழர் பிரதேசத்திலுள்ள மூத்த தமிழ் அரசியல்வாதிகள் மீதான மக்களின் அதிருப்தியே இவ்வாறான நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது.
இவ்வாறு தமிழ் தேசியம் பேசிக்கொண்டிருந்த அத்தனை அரசியல்வாதிகளையும் மக்கள் புறந்தள்ளி புதிய பாதையை தேடியமைக்கான பின்ணனியை ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
https://www.youtube.com/embed/1cC6V7yBdas?start=56