முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தான் நின்ற இடத்தை மறந்து காட்டிற்குள் சென்ற அமெரிக்க ஜனாதிபதி பைடன் :வைரலாகும் காணொளி

‘ஜி20’ மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசிலின்(brazil) ரியோ டி ஜெனிரோ சென்றிருந்தபோது, ​​அமெரிக்க(us) ஜனாதிபதி ஜோ பைடன்(joe biden) அமேசான் மழைக்காடுகளில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய பின்னர் தான் இருக்கும் இடத்தை மறந்து காட்டுக்குள் சென்ற காணொளி வெளியாகி வைரலாகியுள்ளது.

சர்வதேச ஊடகக் குழுவும் பைடனுடன் அமேசான் காடுகளுக்குச் சென்றது.மேலும் காடுகளின் நடுவில் அவர் ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பையும் நடத்தினார். இது தொடர்பான அனைத்து சாதனங்களும் பைடனின் ஆதரவுக் குழுவால் காட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

காட்டிற்குள் சென்ற ஜனாதிபதி பைடன்

செய்தியாளர் சந்திப்பின் முடிவில், பத்திரிகையாளர்கள் பைடனிடம் கேள்விகளைக் கேட்டனர். உக்ரைனுக்கு(ukraine) அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யாவின் இலக்குகளைத் தாக்க அனுமதித்தது தொடர்பானது. ஆனால், பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளை பொருட்படுத்தாதது போல் அவர், செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு பின்னால் காட்டிற்கு நடந்தார்.

அங்கு, பைடனின் உதவியாளர்கள், ‘ ஜனாதிபதி, அங்கு யாரும் இல்லை என தெரிவித்தனர். உடனடியாக, ​​பைடன் ‘ஹாய் கம்’ என்று திரும்பி வருவதைக் காட்டும் தொடர் காணொளிகள் சமூக ஊடகங்களிலும் வெளிநாட்டுச் செய்திச் சேவைகளிலும் பகிரங்கமாகியுள்ளன.

வயதுக்கு ஏற்ப மறதியால் பின்வாங்கிய பைடன்

81 வயதான பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் அதிக வயதானவர் ஆவார். வயதுக்கு ஏற்ப மறதி வருவதால், பைடனுக்கு நிறைய பிரச்சனைகள் வந்துள்ளன.

இந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முதலில் போட்டியிட்டவர் பைடன். இருப்பினும், அவரின் வயது அவருக்குத் தடையாக இருந்தது. அதன்படி, பைடன் ஜனாதிபதி தேர்தலில் இருந்து தயக்கத்துடன் விலகினார், பைடனின் இரண்டாம் இடத்தைப் பிடித்த கமலா ஹாரிஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ்(kamala harris) தோல்வியடைந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்(donald trump) வெற்றி பெற்றார்.

தான் நின்ற இடத்தை மறந்து காட்டிற்குள் சென்ற அமெரிக்க ஜனாதிபதி பைடன் :வைரலாகும் காணொளி | Biden Has Forgotten Where He Is

உலங்கு வானூர்தியில் பயணம்

அமேசான் மழைக்காடுகள் பல லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு சொந்தமானது. இதில் பெரும்பகுதி பிரேசிலுக்கு சொந்தமானது. ஜனாதிபதி பைடனின் ஏர்ஃபோர்ஸ் 1 அதிகாரபூர்வ விமானம் ரியோ டி ஜெனிரோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​​​அவரால் மனாஸில் தரையிறங்க முடியவில்லை, பின்னர், தனது பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களுடன், பைடன் ‘மரைன் 1’ உலங்கு வானூர்தியில் ஏறி அமேசான் மழைக்காடுகளுக்குச் சென்றார்.

தான் நின்ற இடத்தை மறந்து காட்டிற்குள் சென்ற அமெரிக்க ஜனாதிபதி பைடன் :வைரலாகும் காணொளி | Biden Has Forgotten Where He Is

மழைக்காடுகளில் கால் நடையாக நடந்த பைடன், காடுகளுக்கு நடுவில் உள்ள அமேசான் மழைக்காடுகள் உட்பட நவம்பர் 17ஆம் திகதியை உலக வனப் பாதுகாப்பு தினமாகப் பெயரிடும் சிறப்பு ஆவணத்திலும் கையெழுத்திட்டார்.

இந்நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் தவிர, பிரேசில் அரசு அதிகாரிகள், அமேசான் பழங்குடியினரின் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. 

https://www.youtube.com/embed/wSH9TBNNtcY?start=9

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.