2009ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ் மக்களின் மனமாற்றங்களை உள்வாங்க மறுத்தமையே சுமந்திரன் மற்றும் பலரின் படுதோல்விக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட கௌசல்யா நரேந்திரன் போன்றோர் சுமந்திரனை விட அதிக வாக்குகளை பெற்றமைக்கும் இதுவே காரணம் என கூறப்படுகின்றது.
தமிழரசுக் கட்சி சார்பாகவும் பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருந்தனர். எனினும், அவர்கள் கௌசல்யா பெற்ற வாக்குகளை பெறத் தவறினர்.
அதற்கு காரணம், தமிழரசுக் கட்சி தான் சொல்வதை செவிமடுக்கும் ஒரு பெண் வேட்பாளரை தேடியது. மக்கள் சுயமாக இயங்கக்கூடியவருக்கு வாக்களித்தனர் எனக் கூறப்பட்டுள்ளது.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,