முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் : ஜனாதிபதியின் கொள்கை பிரடன உரை ஆரம்பம் – LIVE

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கொள்கை பிரகடன உரை தற்போது நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் இன்று முற்பகல் ஆரம்பமாகியிருந்த நிலையில், சற்று முன்னர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரால் சம்பிரதாயபூர்வமாக அழைத்து வரப்பட்டார்.

இந்தநிலையில், தற்போது தனது கொள்கை பிரகடன உரையை ஜனாதிபதி நிகழ்த்தி வருகின்றார்.

புதிய இணைப்பு

10ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரங்வல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், முதலாவதாக சபாநாயகர் நியமனம் இடம்பெற்றுள்ளது.

சபாநாயகராக அசோக சபுமல் ரங்வல்லவை நியமிக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்மொழிந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரதி சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மத் ரிஸ்வி சாலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

நாடடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சபை முதல்வராக பிமல் ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சி பிரதம கொறடாவாக நளிந்த ஜயதிஸ்ஸவும், எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.   

இதேவேளை, சபாநாயகர் அசோக சபுமல் ரங்வல்லவினால் நாடாளுமன்றம் ஒரு மணி நேரத்திற்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தலைமையில் அமர்வு ஆரம்பமாகியுள்ளதுடன்,  மிக எளிமையான முறையில் அமர்வு நடத்தப்படவுள்ளமை குறி்ப்பிடத்தக்கது. 

நாடாளுமன்றத்தைச் சுற்றி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில்,  நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் அங்கு பிரசன்னமாகியுள்ளனர்.

அவை ஆரம்பிக்கும் போது முதலாவதாக சாபாநாயகர் தெரிவு இடம்பெற்றுள்ளது. அதனையடுத்து பிரிதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர்கள் ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர். 

இதனையடுத்து புதிய சபாநாயகரால் சபை சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்படும். இதனையடுத்து இன்று காலை 11.30 மணியளவில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.