சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விவாகரத்தை அறிவித்து சில வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது நாக சைதன்யா அவரது புது காதலியான நடிகை சோபிதாவை இரண்டாம் திருமணம் செய்ய இருக்கிறார்.
நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த நிலையில் வரும் டிசம்பர் 4ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.
கைகோர்த்து வந்த ஜோடி.. வீடியோவுக்கு ட்ரோல்கள்
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரும் கைகோர்த்து வந்து இருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே சோபிதா உடன் நாக சைதன்யா வெளியிட்ட ஒரு லிப்ட் போட்டோவுக்கு மோசமான கமெண்டுகள் தான் வந்தது. அதை தொடர்ந்து அவர் யாரும் கமெண்ட் செய்யாத வகையில் பதிவை மாற்றினார்.
அதே போல தற்போது அவர்கள் கைகோர்த்து வரும் வீடியோவையும் நெட்டிசன்கள் நெகடிவ் ஆக தான் விமர்சித்து வருகின்றனர். அதில் சமந்தா பெயரை குறிப்பிட்டு பல்வேறு கமெண்டுகள் வருகிறது.
View this post on Instagram