முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ராஜபக்சர்களின் உகண்டா பண விவகாரம்: அநுர அரசுக்கு நாமல் கூறவந்த செய்தி

உலகில் எங்காவது தங்களுக்கு சொந்தமான சொத்து இருந்தால் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

மிஹிந்தலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எதையும் செய்யாத அரசியல் கட்சி

அதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது, “மக்கள் விடுதலை முன்னணியின் அரசியலை போன்று, குறிப்பிட்ட ஒருவரை நோக்கி நேரடியாக விரல் நீட்ட முடியாது.

ராஜபக்சர்களின் உகண்டா பண விவகாரம்: அநுர அரசுக்கு நாமல் கூறவந்த செய்தி | Hidden Money In Uganda Namal S Challenge To Anura

எந்தவொரு நபரின் மோசடி அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால், அது நீதிமன்றத்தின் முன் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அப்படி ஒரு தீர்மானம் இருந்தால் கட்சி என்ற ரீதியில் அதுபற்றி முடிவெடுக்கலாம். மக்களும் ஏற்றுக் கொள்வார்கள்.

இன்றைய அரசியல் களத்தில் எல்லோரையும் திருடர்கள் என்று கூறுவது கோஷமாக மாறிவிட்டது.ஆனால், அதன் விளைவாக எதையும் செய்யாத அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது.

புதிய அமைச்சர்கள்

மற்ற கட்சிகளை திருடர்கள் என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

உகாண்டாவில் உள்ள பணத்தைப் பற்றி, ஷெல்ஸில் உள்ள பணத்தைப் பற்றி பேசுகிறார்கள், உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் செல்ல முடியாது. அப்படி செல்வதற்கும் மக்களின் வரிப்பணம் செலவளிக்கப்படுகிறது.

ராஜபக்சர்களின் உகண்டா பண விவகாரம்: அநுர அரசுக்கு நாமல் கூறவந்த செய்தி | Hidden Money In Uganda Namal S Challenge To Anura

ஒரு அரசியல்வாதி, வர்த்தகர் அல்லது நாட்டின் குடிமகன் முறைகேடாக பணம் சம்பாதித்திருந்தால், அந்த பணத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவோம்.

புதிய அமைச்சர்களும் அரசாங்கமும் பொய்யான அறிக்கைகளை வெளியிடாமல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

இவர்கள் கூறியது போல் உலகில் எங்காவது நமக்கு சொந்தமான சொத்து இருந்தால் அதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்.

திருடர்கள் பிடிபட வேண்டும், மற்றவரை திருடன் என்று பொய்யாக குற்றம் சாட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாட்டில் சட்டம் வரவேண்டும்.” என்றார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.