முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உக்ரைன் – ரஷ்ய போர் தீவிரம்! அதிரடியாக பணி நீக்கப்பட்ட ஜெனரல்!

உக்ரைன் போர் தொடர்பாகப் பொய்யான தகவல்களை அளித்த மூத்த ஜெனரல் ஒருவரை ரஷ்ய ராணுவம் நீக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த சில வாரங்களில் மிக தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் மூத்த ஜெனரல் ஒருவரை பணி நீக்கம் செய்துள்ளது.

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் தங்களின் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த ரஷ்யாவுக்கு அனுமதி அளித்தன.

ரஷ்யா – உக்ரைன்  மோதல்

இதனால், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான மோதல் மிகவும் மோசமானது. இதையடுத்து, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவ் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரம்! அதிரடியாக பணி நீக்கப்பட்ட ஜெனரல்! | Putin Fires Top Commander For Lying Ukraine War

அதன் ஒரு பகுதியாக ரஷ்யா மற்றும் உக்ரைன் போரில் மோசமாகச் செயல்படும் தளபதிகளை அதிரடியாக நீக்கியுள்ளார்.

உக்ரைனில் இன்னும் சில மாதங்களில் குளிர் காலம் ஆரம்பிக்கவுள்ளதால் விரைவில் உக்ரைனுக்குள் ஊடுருவ ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

இந்தச் சூழலில், சிவர்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய ராணுவத்தை வழிநடத்திய தெற்கு குழுமத்தின் தளபதியான கர்னல் ஜெனரல் ஜெனடி அனாஷ்கின் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய ராணுவத்தின் நடவடிக்கை

சிவர்ஸ்க் பகுதியில் ராணுவத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும் அங்குத் தலைமை சரி இல்லை என்று புகார் வந்த நிலையில், அங்கு ஜெனரலாக இருந்தவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ரஷ்யா ஆதரவாளர்கள் சிலர் சர்வதேச ஊடகங்களில், “அந்த பிராந்தியத்தில் பிரச்சினை இருந்தது. அதைத் தான் நாங்கள் தொடர்ந்து சொல்லி வந்தோம்.

அதைக் கண்டுபிடித்துச் சரி செய்ய 2 மாதங்கள் ஆகியுள்ளது.

உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரம்! அதிரடியாக பணி நீக்கப்பட்ட ஜெனரல்! | Putin Fires Top Commander For Lying Ukraine War

செவர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள போர் சூழல் குறித்து தவறான தகவல்களை வழங்கி வந்ததால் அனாஷ்கினை ரஷ்ய ராணுவம் நீக்கியுள்ளது” என்று கூறியுள்ளனர்.

ரஷ்யா உக்ரைன் போர் வரும் காலங்களில் மேலும் மோசமானதாக மாறும் என்று அஞ்சப்படுகிற சூழலில் ரஷ்ய ராணுவம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.