ஏ.ஆர்.ரகுமான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா கொண்டாடும் பிரபலமாக வலம் வருகிறார்.
எந்த ஒரு நிகழ்ச்சி வந்தாலும் ஒரு அமைதி, அடக்கம் என தான் ஒரு பெரிய பிரபலம் என்பதை மறந்து சாதாரணமாக மக்களோடு மக்களாக பயணிப்பார்.
இவர் தனது மனைவி சாய்ராவை 29 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்வதாக அறிவிப்பு வந்த பின் ஏ.ஆர்.ரகுமான் குறித்து பலரும் தவறாக விமர்சனம் செய்து வந்தனர்.
அது மிகவும் தவறான செய்தி என்று கூறி ஏ.ஆர்.ரகுமான் மனைவி மற்றும் மகன் என அனைவரும் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர்.
விளக்கம்
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தனக்கு தந்தை போன்றவர் என்று கூறி சர்ச்சைகளுக்கு மோகினி டே முற்றுப்புள்ளி வைத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அமரனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் 25 – வது படத்தின் அப்டேட்.. அசரவைக்கும் பட்ஜெட் பாருங்க
அதில், “‘எனக்கு பல ரோல் மாடல்கள் உள்ளனர்.
அவர்களில் ஏ.ஆர்.ரகுமானும் ஒருவர் எனது வளர்ச்சியில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. அவருக்கு எனது வயதில் மகள் உள்ளார்.
எனவே அவர் எனக்கு தந்தையைப் போன்றவர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரையும் என்னையும் குறித்து வரும் வதந்திகள் அனைத்தும் பொய்யானது.
அது மிகவும் காயப்படுத்துகின்றன. எனவே கனிவாக நடந்து கொள்ளுங்கள்” என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
#MohiniDey – ” A.R.Rahman sir is the legend, He is Just like a Father to me ” pic.twitter.com/cH2tlLxDt3
— A.R.Rahman Loops (@ARRahmanLoops) November 25, 2024