சீனாவின் தொழில்நுட்பம் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு யாழ். பல்கலைக்கழகம் விருப்பம் தெரிவிக்காமை இலங்கைக்கான சீன நாட்டுத் தூதுவர் கீ சென்ஹொங்கிற்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பிரித்தானியாவின் இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழில் அரசியல் சுயலாபங்களுக்காக சிலர் சீனாவின் உதவியை புறந்தள்ளுகின்றனர்.
தமிழர் தாயக முன்னேற்றத்திற்கு தொழிநுட்பம் என்பதும் முக்கியமான விடயம் என்ற அடிப்படையில் அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும், அதற்கு இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் தொழிநுட்பங்களும் கட்டாயம் தேவை” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாட்டு இராஜ தந்திர உறவுகள், சர்வதேச நாடுகளின் இலங்கை மீதான தாக்கம் மற்றும் யாழ் பல்கலைக்கழகத்திற்கான சீனாவின் தொழிநுட்பத்தின் அவசியம் என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
https://www.youtube.com/embed/yxXZXWT1x9E