நாக சைதன்யா – சோபிதா
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நாக சைத்தன்யாவிற்கு, நடிகை சோபிதாவுடன் மறுமணம் நடக்க இருக்கிறது. சிம்பிளாக இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்தது, திருமணமும் விரைவில் நடக்க உள்ளது.
பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 45’ படப்பிடிப்பு பணிகள்.. வைரலாகும் வீடியோ
அதுவும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சில தினங்களாக இவர்களது திருமணம் குறித்த ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதாவது நாக சைத்தன்யா-சோபிதா திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக.
அதுவும் ரூ.50 கோடி கொடுத்து இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை வாங்கி உள்ளதாகவும் ஒரு செய்தி உலா வந்தது.
ஷாக்கிங் தகவல்
ஆனால், இந்த செய்தி பொய்யானது என்றும், இந்த செய்தி தேவையில்லாத வதந்தி என்றும், சோபிதா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் தங்களின் திருமணத்தை தனிப்பட்ட முறையில் ரகசியமாக வைக்க விரும்புவதாக நெருக்கமானவர்கள் கூறியிருப்பதாக பத்ரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Fake News Alert 🚨
Reports suggesting that @chay_akkineni and @sobhitaD’s wedding will be sold to an OTT platform are completely false. A close source has confirmed that these rumors are baseless. The couple is focused on keeping their special day private and personal.…
— Ramesh Bala (@rameshlaus) November 27, 2024