மீண்டும் கமல்ஹாசனா
பிக் பாஸ் 8ம் சீஸன் தற்போது 6 வாரங்களை நிறைவு செய்து இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வைல்டு கார்டு எண்ட்ரியாக பல போட்டியாளர்களை களமிறக்கி இருந்தனர். தமிழ் சீசன் 8ல் இந்த வாரம், நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் நடந்து வருகிறது.
கடந்த 7 சீசனாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், சில காரணங்களால் கமல்ஹாசன் விலகி இந்த சீசன் முதல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த சீசனில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு சம்மந்தப்பட்ட போட்டியாளர்களை நிற்க்க வைத்து கேள்வி கேட்டு விடுகிறார் விஜய் சேதுபதி.
வெளிவந்தது ரசிகர்கள் மனம் கவர்ந்த 96 படத்தின் 2 பார்ட் அப்டேட்.. என்ன தெரியுமா
இருப்பினும், இந்த சீசன் சற்று சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் இல்லாமல் இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஷாக்கிங் நியூஸ்
இந்நிலையில், தற்போது மீண்டும் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணைத்தலைவர் பகிர்ந்துள்ளார்.
அதில், ” கமல்ஹாசன் ஏஐ தொழில்நுட்பம் குறித்து படிக்க சென்றதால் தான் அவரால் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. அடுத்த சீசன் முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளார்.