முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கு கிழக்கின் கல்வி உட்பட அபிவிருத்திகள் குறித்து ஜனாதிபதி கலந்துரையாடல்

Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து, நேற்று 27ஆம் திகதியன்று, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் உலக வங்கி குழுமத்தின் தலைவர் அஜய் பங்கா ஆகியோருக்கு இடையில் மெய்நிகர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிப்பதிலும் முக்கியமான வளர்ச்சி சவால்களை எதிர்கொள்வதிலும் தனது அர்ப்பணிப்பை, உலக வங்கியின் தலைவர் எடுத்துரைத்ததாக ஜனாதிபதியின் ஊடகம் தமது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார செழிப்பு போன்ற துறைகளில் புதுமையான தீர்வுகளை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது தொடர்பில் அவர் முன்னுரிமைகளை அறிவித்துள்ளார்.

அரசாங்க வருவாய்

இந்த சந்திப்பின் போது, குறிப்பாக கிராமப்புறங்களில் வறுமையை ஒழிப்பதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்துவதை ஜனாதிபதி திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கின் கல்வி உட்பட அபிவிருத்திகள் குறித்து ஜனாதிபதி கலந்துரையாடல் | Education Developments In North And East

மின்சார உற்பத்தியில் முதலீட்டாளர் பங்கேற்பை ஊக்குவிப்பது, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சுற்றுலா, கடல்சார் தொழில், அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி துறை போன்ற முக்கிய துறைகளை வலுப்படுத்துவதன் மூலம் அரசாங்க வருவாயை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் குறிப்பாக கல்வி, சுகாதாரம் மற்றும் மனித வள அபிவிருத்தி போன்றவற்றில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது, உலக வங்கியின் தலைவருடன் கலந்துரையாடியுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி

பிராந்தியங்களில் வளர்ந்து வரும் தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கல்விக் கல்விக்கு இணையாக தொழிற்கல்வியை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி திஸாநாயக்க வலியுறுத்தினார்.

வடக்கு கிழக்கின் கல்வி உட்பட அபிவிருத்திகள் குறித்து ஜனாதிபதி கலந்துரையாடல் | Education Developments In North And East

இந்தக் கலந்துரையாடலில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும ஆகியோரும் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.