தற்போதைய அரசாங்கம் நாட்டின் பாதுகாப்புடன் விளையாடி வருவதாக புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடு மெதுமெதுவாக பிரிவினைவாதத்திற்கு சென்று ஈழம் உருவாகுமா என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை
இராணுவ முகாம்களை அகற்றுவதற்கும் மூடப்பட்ட வீதிகளை திறப்பதற்கும் அரசாங்கம் இவ்வளவு ஏன் அவசரப்படுகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முகாம்களை அகற்றுவதற்கு முன்னதாக பாதுகாப்புப் பேரவையின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட்டதா என தாம் கேள்வி எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆணையிறவு இராணுவ முகாமையும் அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி நாட்டை பிரிவினைவாதத்திற்கு இட்டுச் செல்ல ஜனாதிபதி முயற்சிப்பதாக தென்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவீரர் தின நிகழ்வுகள்
கடந்த 27ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70ம் பிறந்த தினத்தை முன்னிட்டு போரின் பின்னர் நடைபெற்ற மாபெரும் மாவீரர் தின நிகழ்வுகள் இம்முறை நடைபெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு இடமளித்ததன் மூலம் தேசிய மக்கள் சக்தி தேசிய பாதுகாப்பினை உதாசீனம் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் ஆளும் கட்சி அமைச்சர்களுக்கு இடையிலும் முரண்பாடான கருத்துக்கள் நிலவி வருவதாக சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.