முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கின் வெள்ளப் பேரிடர் : ஆளுநரை சந்தித்த சிறீதரன் எம்.பி

வடக்கின் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்
சிவஞானம் சிறீதரன் (S. Shritharan), வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை (Nagalingam Vedanayagan) நேரில்
சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கலந்துரையாடல் இன்றையதினம் (29.11.2024) செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான உடனடி உதவிகளை வழங்கல்.

இயற்கைப் பேரிடர்

மற்றும் காலநிலைத்
தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கான
நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான
எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வடக்கின் வெள்ளப் பேரிடர் : ஆளுநரை சந்தித்த சிறீதரன் எம்.பி | Sridharan Mp Meets With The Governor

இதேவேளை, இன்றையதினம்  நண்பகல் 12.00 மணி வரையிலான நிலவர அறிக்கையின் படி  யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, 20,732 குடும்பங்களைச் சேர்ந்த 69,384 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

04 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 178 வீடுகள் பகுதியளவில்
சேதமடைந்துள்ளது.

மேலும் 79 பாதுகாப்பு நிலையங்களில் 2,136 குடும்பங்களைச் சேர்ந்த 7,342 பேர்
தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனர்த்த முகாமைத்துவம்

இதேவேளை தமிழரசுக்கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர,
மாவட்ட அரசாங்க அதிபர். ஜஸ்டினா முரளிதரன் ஆகியோருக்கிடையில் இன்று  சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

வடக்கின் வெள்ளப் பேரிடர் : ஆளுநரை சந்தித்த சிறீதரன் எம்.பி | Sridharan Mp Meets With The Governor

குறித்த சந்திப்பில் இரா. சாணக்கியன் (Shanakiyan Rasamanickam),  ஸ்ரீநேசன் (Gnanamuththu Srinesan), இ  ஸ்ரீநாத் (srinath)  அனர்த்த
முகாமைத்துவ உறுப்பினர்களும், உள்ளூராட்சி மன்ற பிரதி ஆணையாளர் மற்றும்
அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் திங்கட்கிழமை (02.12.2024) காலை 10.00 மணிக்கு மாவட்ட மட்டத்தில் அனைத்து
திணைக்கள அதிகாரிகளையும் இணைத்து கூட்டமொன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஒழுங்கு

அதனூடாக பிரதேசங்களில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள், போக்குவரத்து
ஒழுங்குகள் மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

வடக்கின் வெள்ளப் பேரிடர் : ஆளுநரை சந்தித்த சிறீதரன் எம்.பி | Sridharan Mp Meets With The Governor

அனர்த்த
முகாமைத்துவக் குழுவினரால் குறிப்பிட்ட ஒரு தொகை ஒதுக்கப்பட்ட போதும் அத்
தொகையினை முறையான விதத்தில் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும்
முன்மொழிவுகள் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.