முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சீனத் தூதுவரின் கருத்துக்களை ஏற்க முடியாது : கஜேந்திரகுமார் ஆதங்கம்

இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவரான சீனத் தூதுவர் இலங்கையில் இடம்பெற்ற
தேர்தல் முடிவுகள் தொடர்பில் முரண்பாடான தகவல்களை கூறுவது ஏற்கக்கூடிய விடயம்
அல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam ) தெரிவித்துள்ளார்.

அண்மையில் சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் விஜயம்
மேற்கொண்ட நிலையில் தமிழ் மக்கள்,  தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து
விட்டார்கள் இரண்டு தரப்புக்களும் ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்து விட்டன
கருத்துக் கூறியிருந்தார்.

இந்தக் கருத்தை எமது கட்சி கண்டிப்பதோடு இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்
ஒருவர் இவ்வாறு கருத்து கூறுவது நாகரிகமான செயல் அல்ல.

யாழ். தேர்தல் தொகுதியில் மூன்று ஆசனங்கள் 

உண்மையில் தேர்தல் முடிவுகள் தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் ஆதரவு
வழங்கி விட்டார்கள் என கூற முடியாத நிலையில், சீனா தூதுவர் எந்த அடிப்படையில்
அவ்வாறான கருத்தை முன்வைத்தார் என்பது தொடர்பில் கேட்க விரும்புகிறேன்.

சீனத் தூதுவரின் கருத்துக்களை ஏற்க முடியாது : கஜேந்திரகுமார் ஆதங்கம் | Not Accept China Ambassador Comment Gajendrakumar

தேசிய மக்கள் சக்திக்கு யாழ். தேர்தல் தொகுதியில் மூன்று ஆசனங்கள்
கிடைக்கப்பெற்றது மூன்றாவது ஆசனம் சுயேட்சை குழுக்கள் திட்டமிட்ட முறையில்
தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்ததால் அந்த ஆசனம் கிடைத்தது.

இம்முறை இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சுமார் ஒன்றரை இலட்சத்திற்கும்
மேற்பட்ட மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள்

தெற்கு கட்சிகளுக்கு தொடர்ச்சியாக வாக்களிக்கும் ஒரு பகுதியினர் அங்கஜன்
டக்ளசை நிராகரித்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளமையே உண்மையான
விடயம்.

சீனத் தூதுவரின் கருத்துக்களை ஏற்க முடியாது : கஜேந்திரகுமார் ஆதங்கம் | Not Accept China Ambassador Comment Gajendrakumar

இவற்றை அறியாத சீனத்தூதுவர் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து
செயல்பட தயாராகிவிட்டனர் என்ற கருத்தை கூறுவது தமிழ் மக்களை வேண்டுமென்றே தவறான
பாதையில் இட்டு செல்வதாக பார்க்க முடியும்.

தமிழ் மக்கள் நீண்ட காலமாக தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளுக்கு தமது ஆதரவை
கொடுத்து வரும் நிலையில் அவர்களின் கோரிக்கை தொடர்பில் சீன தூதுவர்
அரசாங்கத்திற்கு எடுத்துக் கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.