முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பௌத்தர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முயற்சி! சாடும் சோபித்த தேரர்

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பௌத்தர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதாக ஓமல்பே சோபித்த தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் (Colombo) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“பௌத்தர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதற்கு சில தரப்பினர் சதித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பௌத்தர்களிடையே பிரிவினை

இவ்வாறு மேற்கொண்டு மேற்கொள்ளப்படும் சதித்திட்டங்களுக்காக புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வரையறையின்றி நிதியளித்து வருகின்றன.

சில கட்டுக்கதைகளால் மத நம்பிக்கைகளை மட்டுப்படுத்த முடியாது. இவ்வாறான மட்டுப்பாடுகளை மேற்கொள்வதற்கு சில சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

பௌத்தர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முயற்சி! சாடும் சோபித்த தேரர் | Diaspora Tamil Orgnizatn Create Division Buddhists

பௌத்த தர்மத்தை அடிப்படையாகக் கொண்டே, சிங்கள இனத்தவர்களுக்கு இடையிலான பலம்வாய்ந்த பிணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

எனினும், கட்டுக்கதைகளை நம்பும் போது, மகாவம்சம், தீபவம்சம் சூலவம்சம் என்பன செல்லுபடியற்ற நூல்களாகிவிடுகின்றன.

சிங்களவர்களுக்கு உள்ள உரிமை

அதன்பின்னர் வரலாறு பொய்யாகிப் போவதுடன், இந்த மண்ணின் மூத்த குடிகளான சிங்களவர்களுக்கு உள்ள உரிமையும் இல்லாது போகும்.

இந்த பிரிவினை செயற்பாடுகளுக்காகப் புத்தக அச்சிடுதல் உள்ளிட்ட பல திட்டங்கள், பாரிய நிதிச் செலவில் முன்னெடுக்கப்படுகின்றன.

பௌத்தர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முயற்சி! சாடும் சோபித்த தேரர் | Diaspora Tamil Orgnizatn Create Division Buddhists

கல்கிரியாகம பகுதியில் பல ஏக்கர் கணக்கில் ஹெலகம என்ற குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக தமிழ் புலம்பெயர் அமைப்புகள் அதிகளவில் பணத்தைச் செலவு செய்துள்ளது. இதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்களும் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்