தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் பொருளாதார விரிவாக்கம் என்பது இருந்தால்தான் அதிகளவு வரி வருமானத்தை அரசாங்கம் திரட்ட முடியும்.
அதேபோல வருமான வரியை அதிகரிப்பது என்று சொன்னாலும் கூட, நிறுவனங்கள் அதிகளவு வருமானத்தை ஈட்டினால்தான் அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கப்பெறும்.
ஆகவே, தற்போதைய சூழ்நிலையில் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கான முக்கிய வழி பொருளாதாரத்தை விரிவாக்கம் செய்வது தான்.
எனினும், இந்த பொறிமுறை செயற்பாடு இலகுவாக வரக்கூடிய ஒன்றல்ல.
குறிப்பாக அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே ஏற்பட்ட அறுகம் வளைகுடா (Arugam Bay) பிரச்சினையானது வெறுமனே தற்செயலாக நடந்த நிகழ்வாக இதைப் பார்க்க முடியாது.
இதற்கு பின்னணியிலே ஒரு மறைகரம் தொழிற்படுவதாகத்தான் நாங்கள் கருத வேண்டி இருக்கின்றது.
எனவே, மாறி வருகின்ற பூகோள அரசியல் சூழல்களும் இலங்கை அரசாங்கத்திற்கு சவால் மிக்க ஒன்றாகவே அமையும் என்று தான் நம்புவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்….