நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கோலிவுட்டில் மிக முக்கிய நடிகராக மாறி இருக்கிறார். 300 கோடிக்கும் மேல் வசூலித்து அந்த படம் சிவகார்த்திகேயன் கெரியரில் புது சாதனை படைத்தது.
சிவகார்த்திகேயன் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு துப்பாக்கி படம் போல் சிவகார்த்திகேயன் கெரியரை முருகதாஸ் புது உச்சத்திற்கு கொண்டு செல்வாரா என எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
டாக்டர் அக்கா
நடிகர் சிவகார்த்திகேயன் தனது அக்கா பற்றி ஒரு பதிவை போட்டிருக்கிறார். திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு MBBS படித்து முடிந்தது. 38 வயதில் MD படிப்பை கோல்டு மெடல் உடன் முடிந்தது, அதை தொடர்ந்த தற்போது 42 வயதில் FRCP முடிந்தது என பல தடைகளை தாண்டி அவர் சாதித்து வருகிறாராம்.
இதை குறிப்பிட்டு சிவகார்த்திகேயன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார்.
View this post on Instagram