சூர்யா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து சில வாரங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் கங்குவா. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.
தற்போது கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவரது 44 – வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து, சூர்யா ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் அவரது 45 – வது படத்தில் நடிக்கிறார்.
மூன்றாவது முறையாக இணைந்த ராஷ்மிகா – விஜய் தேவர்கொண்டா.. மகிழ்ச்சியான நியூஸ்
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்நிலையில், சூர்யா 45 படம் குறித்து தற்போது ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.
மாஸ் அப்டேட்
அதாவது, சூர்யா அவரது 45 – வது படத்தில் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன் அவர் நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படத்திலும் சூர்யா வழக்கறிஞர் ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த படமும் சூர்யாவுக்கு ஒரு மாஸ் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.