கனடா (Canada) அரசாங்கம் புதிய சட்டத்தால் 324 வகையான துப்பாக்கிகளை தடைசெய்யும் திட்டத்தை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, ரஷ்யாவிற்கு (Russia) எதிராக போராட உதவுவதற்காக இந்த துப்பாக்கிகளை உக்ரைனுக்கு நன்கொடையாக வழங்குவதற்கும் கனடா அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் 1,500 வகையான துப்பாக்கிகள் தடைசெய்யப்பட்டதுடன் இந்த பட்டியல் 2023 ஆம் ஆண்டில் 2,000 இற்கு மேல் வளர்ந்தது.
உக்ரைனின் வெற்றி
தற்போது புதிய வகைகள் அடையாளம் காணப்பட்டதால், இந்த பட்டியலில் மேலும் 324 வகைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் குறித்த துப்பாக்கிகளை இனி பயன்படுத்த முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லெப்ளாங்க் (Dominic LeBlanc) தெரிவித்துள்ளார்.
தற்காப்பு அமைச்சர் பில் பிளேர்டி (Bill Blair) இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், உக்ரைன் (Ukraine) அதிகாரிகளுடன் கனடா பேச்சுவார்த்தை நடத்தியதையும் அவர்கள் சில துப்பாக்கிகளில் ஆர்வம் காட்டியதையும் உறுதிப்படுத்தினார்.
அத்தோடு, உக்ரைனின் வெற்றிக்காக எவ்வித உதவியையும் வழங்கத் தயார்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொன்ற சம்பவம்
இந்த நடவடிக்கை 1989 ஆம் ஆண்டு மான்ட்ரியலில் (Montreal) நடைபெற்ற ஏகோல் பாலிடெக்னிக் குண்டுவெடிப்பு நினைவுதினத்தின் முன்னோட்டமாகவும் வந்துள்ளது.
அப்பொழுது ஆயுததாரி ஒருவர் 14 பெண்களை கொன்ற சம்பவம் கனடாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டின் முக்கியதுவத்தை எடுத்துக்காட்டியது.
துப்பாக்கி கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகளை ஆதரித்த கணவரால் காயமடைந்த நதாலி பிரோவோஸ்ட் (Nathalie Provost), “இந்த ஆயுதங்கள் போருக்கு மட்டுமே தகுந்தவை, தடை அறிவிப்புக்கு நான் பெருமைப்படுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை எதிர்த்து, கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் பியர் போலியேவ்ரே (Pierre Bolivar), இதை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அரசாங்கத்தின் தூண்டல் நடவடிக்கை என்றும் இது சட்டப்படி துப்பாக்கி வைத்திருப்பவர்களை முறைசாரா தாக்குவதாகவும் விமர்சித்துள்ளார்.
மேலும், கனடாவில் துப்பாக்கி சம்பவங்கள் அதிகமாக இருக்கும் நிலையில், அரசு தீவிரமான சட்டங்களை வகுக்க முனைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.