மாரி சீரியல்
ஜீ தமிழில் வெற்றிகரமாக நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அப்படி ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் தான் மாரி.
கடந்த ஜுலை 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் இதுவரை 700க்கும் அதிகமான எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.
எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்துகொள்ளும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை சுறறிய ஒரு கதை.
வதந்தி
இந்த தொடர் குறித்து கடந்த சில நாட்களாக ஒரு தகவல் வலம் வருகிறது. அதாவது மாரி தொடரில் நாயகியாக நடித்துவரும் ஆஷிகா கோபால் சீரியலில் இருந்து வெளியேறுவதாக கூறப்பட்டு வந்தது.
தற்போது இதுகுறித்து ஒரு தகவல் வந்துள்ளது, அதாவது ஆஷிகா மாரி சீரியலில் இருந்து வெளியேறவில்லை, இது முற்றிலும் வதந்தி தானாம். இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.
View this post on Instagram