புஷ்பா 2
தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகன் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியான படம் புஷ்பா 2.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா என பலர் நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருந்தார்.
ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் உருவாகி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ்
2 நாளில் ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் 5 நாள் முடிவில் ரூ. 900 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம். ரிலீஸ் ஆன வேகத்தில் ரூ. 1000 கோடியை இப்படம் நெருங்கி இருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.