மமிதா பைஜூ
மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி, தொடர்ந்து படங்கள் நடித்து, சூப்பர் சரண்யா படத்தின் மூலம் பிரபலமானவர் மமிதா பைஜூ.
இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட இவர், இந்த ஆண்டு ப்ரேமலு எனும் ஹிட் படத்தை கொடுத்துள்ளார். மேலும் தளபதி விஜய்யுடன் இணைந்து தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜையில் கூட மமிதா பைஜூ கலந்துகொண்டு, விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
6 நாட்களில் புஷ்பா 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
இளம் நடிகருடன் கூட்டணி
இந்த நிலையில், அடுத்ததாக புதிய படத்தில் இளம் நடிகருடன் ஜோடி சேர்ந்து மமிதா பைஜூ நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் லவ் டுடே எனும் சென்சேஷனல் ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். இவருக்கு ஜோடியாக தான் மமிதா பைஜூ புதிய படத்தில் நடிக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படத்திற்கு இளம் சென்சேஷனல் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.