ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தனது இந்திய விஜயத்தை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இன்றையதினம் (10) விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் வெளிவிவார அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரும் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாவது வெளிநாட்டுப் பயணம்
இதன்போது, டிசெம்பர் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுர இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அநுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.