முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாகாணசபைத் தேர்தல் : வெளியான தகவல்

எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி (LG) மன்ற தேர்தலுக்குப் பின்னர் மாகாண சபைத் தேர்தல்கள் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று குறிப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர்  2014 இல் ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கும், 2013 இல் வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும், 2012 இல் கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் மாகாண சபை தேர்தல்கள், நடத்தப்பட்டன.

மைத்திரி – ரணில் ஆட்சிக் காலத்தில் பிற்போடப்பட்ட தேர்தல்கள்

மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) – ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தில் எல்லை நிர்ணய அறிக்கை நிராகரிக்கப்பட்டதன் காரணமாக, தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டு காலத்துக்குப் பின்னர் முடிவடைவதற்கு காரணமான தேர்தல்கள் பிற்போடப்பட்டன.

மாகாணசபைத் தேர்தல் : வெளியான தகவல் | Pc Polls Expected Before End 2025

கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தேர்தல்கள் மேலும் ஒத்திவைக்கப்பட்டன.

உறுதியான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை

செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற அமைச்சரவை 
முடிவுகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில், மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இன்னும் உறுதியான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெளிவுபடுத்தினார்.

மாகாணசபைத் தேர்தல் : வெளியான தகவல் | Pc Polls Expected Before End 2025

தற்போதுள்ள அரசியலமைப்பின் படியே மாகாண சபைகள் தற்போது பராமரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகளின் எதிர்காலப் பாத்திரத்தை தீர்மானிப்பதற்கான பொது ஆலோசனைகளும் உள்ளடக்கப்படும் என்றும் கலாநிதி ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், புதன்கிழமை (4) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது, ​​ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake ), மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.