புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பைசர் முஸ்தபாவின் (Faiszer Musthapha) பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு இன்றையதினம் (11) வெளியிட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற ஆசனங்களை கைப்பற்றியது.
வர்த்தமானி அறிவித்தல்
அதில் ஒரு ஆசனத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பெயரை முன்மொழிவதற்கு முன்னணி நடவடிக்கை எடுத்திருந்தது.
அதனை தொடர்ந்து, மற்றைய தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு பைசர் முஸ்தபாவின் பெயர் முன்மொழியப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.