கவுண்டமணி
கவுட்ண்டர்களின் மன்னன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் காமெடி கிங் கவுண்டமணி. இவருடைய நகைச்சுவை என்றும் நம்மால் மறக்கவே முடியாது.
குறிப்பாக செந்திலுடன் இணைந்து இவர் செய்யும் நகைச்சுவைகள் பட்டையைக் கிளப்பும். 84 வயதாகும் நடிகர் கவுண்டமணி தற்போதும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். முதல் முறையாக யோகி பாபுவுடன் கூட்டணி அமைந்துள்ள கவுண்டமணி ‘ஒத்த நோட்டு முத்தையா’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
9 நாட்களில் புஷ்பா 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர், நடிகைகளின் அன்ஸீன் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். இவர் இந்த திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா என ஆச்சரியப்படவும் வைக்கும்.
சிவாஜி, நாகேஷ் உடன் நடித்துள்ள கவுண்டமணி
அந்த வகையில் தற்போது நடிகர் கவுண்டமணி அவர்கள் சினிமாவில் நகைச்சுவை கிங் ஆவதற்குப் பல வருடங்களுக்கு முன், நடிகர் திலகம் சிவாஜி மற்றும் நாகேஷ் ஆகியோரின் படங்களில் சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
சிவாஜி நடிப்பில் வெளிவந்த ராமன் எத்தனை ராமனடி படத்திலும், நாகேஷின் தேனும் பாலும் படத்திலும் ட்ரைவர் கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடித்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
கவுண்டமணி முதல் இரண்டு படங்களில் டிரைவராக நடித்தார். ராமண் எத்தனை ராமனடி 1970
தேனும் பாலும் 1971 pic.twitter.com/sUSDZbfDnH— 𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 (@im_inba1) December 11, 2024