முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பதவிகளை பயன்படுத்தி மக்களுக்கு சரியான சேவைகளை வழங்க வேண்டும்! வடக்கு ஆளுநர்

பதவிகள் சேவை செய்வதற்காக வழங்கப்படுகின்ற நிலையில் அவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு சரியான சேவைகளை வழங்க வேண்டும், இல்லாவிடின் அந்தப் பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை என
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்(N.vedhanayagan)  தெரிவித்துள்ளார்.

பாடசாலையொன்றில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

கல்வியால்தான் மாற்றம்

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நாங்கள் கல்வி கற்ற காலத்துக்கும்
தற்போதைய காலத்துக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அன்றைய காலத்தில் நாம் தனியார் கல்வி
நிலையங்களுக்கு கூட செல்வதில்லை அதற்கான தேவைப்பாடும் ஏற்படவில்லை.

கல்வியால்தான் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

பதவிகளை பயன்படுத்தி மக்களுக்கு சரியான சேவைகளை வழங்க வேண்டும்! வடக்கு ஆளுநர் | Northern Province Governor N Vethanayagan

கிராமத்தின் அபிவிருத்தியோ,
எதுவாகினும் கல்வியால் அந்த மாற்றங்களை உருவாக்க முடியும்.

அதேநேரம் கல்வியில் எவ்வளவு உயர்ந்து விளங்கினாலும் நாங்கள் பண்புள்ளவர்களாக
இல்லாவிட்டால் எம்மை யாரும் மதிக்க மாட்டார்கள்.

உயர் பதவியிலிருந்தாலும் பண்பு
இல்லாவிட்டால் யாரும் எம்மை மதிக்க மாட்டார்கள் எனவே பதவி வரும் போது பணிவு
வரவேண்டும்.

இன்றைய மாணவ சமுதாயத்துக்கு பணிவு, இரக்கம், அன்பு என்பவற்றை ஆசிரியர்கள்
கூடுதலாக போதித்து அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றவேண்டும்.

சிறந்த சமூகம்

இன்று தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பதற்கே எல்லோரும் தயங்குகின்றனர். அந்தளவு
தூரத்துக்கு பயம் நமக்கு ஏன் வீண் வம்பு என்று ஒதுங்கிப்போகின்றனர்.
அதேபோல, வீதிகளில் குப்பை போடுகின்றனர்.

பதவிகளை பயன்படுத்தி மக்களுக்கு சரியான சேவைகளை வழங்க வேண்டும்! வடக்கு ஆளுநர் | Northern Province Governor N Vethanayagan

1970 ஆம் 1980 ஆம் ஆண்டுகளில்  மிகத் தூய நகரமாக இருந்த யாழ்ப்பாணம் இன்று மிக குப்பையான நகரமாக
மாறியிருக்கின்றது.

மோட்டார் சைக்கிள்களில், கார்களில் வந்து குப்பைகளை கொட்டிவிட்டு
செல்கின்றனர். வீதியிலும், வாய்க்காலிலும் குப்பை போட்டு விட்டு வீதிகளையும், வாய்க்கால்களையும் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுவிட்டு  பின்னர் வெள்ளம் வந்துவிட்டது என்று கத்துவதும் நாங்கள்தான்  எனவே எங்களின் மனநிலை மாறவேண்டும்.

இளமையில் – இந்த மாணவர்களிடத்தில் சரியான பழக்க
வழக்கங்களை – விழுமியங்களை ஆசிரியர்கள் விதைக்கவேண்டும்.

அப்போதுதான்
எதிர்காலத்தில் சிறந்த சமூகத்தை கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும்.

நாம்
மற்றவருக்கு உதவவேண்டும். அப்படிச் செய்தால் எமக்கு பல மடங்கு
திருப்பிக்கிடைக்கும்.

இந்தப் பழக்கங்களை மாணவர்களிடத்தில் வளர்த்தெடுக்க வேண்டும். எதிர்காலச்
சிற்பிகளான மாணவர்கள் சமூகத்தில் கல்வியறிவுடன் சிறந்த ஒழுக்கத்துடன்
வளரவேண்டும் அதற்கு ஆசிரியர்கள் வழிகாட்டவேண்டும்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.