அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், செப்டெம்பர் மாதம்
மாகாண சபைத் தேர்தலையும் நடத்த ஜனாதிபதி அநுரகுமார (Anura Kumara Dissanayake) தலைமையிலான அரசு
திட்மிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,அடுத்த வருடம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும்
மாகாண சபைத் தேர்தலுக்கான திகதிகளை அரசு தீர்மானித்துள்ளது என்று நம்பகரமான
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வேட்புமனுக்களை
இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களைக் கோரும் வகையில் உள்ளூராட்சி சபைத்
தேர்தலை ஏப்ரல் மாத தொடக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
அத்தோடு, 7 ஆண்டுகளுக்கும் மேலாகத்
தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் செப்டெம்பர் மாதம்
நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை விரைந்து முடிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு
எடுத்து வருகின்றது எனவும் கூறப்படுகின்றது என்றுள்ளது.