புஷ்பா 2
2024ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் ஒன்றாக புஷ்பா 2 மாறியுள்ளது. கடந்த வாரம் வெளிவந்த இப்படம் பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
கல்யாணம் முடிந்த கையோடு தனது கணவர் வெற்றி வசந்த் குறித்து சீரியல் நடிகை வைஷ்ணவி போட்ட பதிவு…. அடடே அடடே
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களுக்கு இசையமைக்க, சாம் சி.எஸ் பின்னணி இசையமைத்திருந்தார்.
வசூல் விவரம்
முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் தொடர் சாதனைகளை படைத்தது. இந்த நிலையில், தற்போது 10 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இதுவரை உலகளவில் ரூ. 1200 கோடி வசூல் செய்துள்ளது.
விரைவில் ரூ. 1500 கோடியை எட்டும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், அல்லு அர்ஜுனின் திரை வாழ்க்கையில் ரூ. 1500 கோடி வசூல் செய்த முதல் திரைப்படமாக புஷ்பா 2 அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.